நடிகர் சூர்யா கோயபுத்தூரில் நடத்த பட்ட தனது தந்தையின் ஓவிய கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் அப்போது தீடீர் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் போராட்டகாரர்களையும், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோயமுத்தூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்த அணைத்து ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு என்பது நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரு விளையாட்டு என்றும் இதனை ஒரு தமிழனாக நாம் எப்போதும் விட்டு கொடுக்க கூடாது என்றும் ஜல்லிக்கட்டை மீட்க நாம் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி வைத்திருக்கும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் செய்தியாளர்கள் எஸ் 3 படம் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த சூர்யா எஸ் 3 படம் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ற போல் வந்துள்ளது என்றும், கண்டிப்பாக முன்பு வெளிவந்த இரண்டு பாகம் போல் இந்த படமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளபடும் என நம்புவதாக தெரிவித்தார்.