மாநில அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்பேன் என்று கூறும் பிரதமர் மோடி என்ன சொல்ல வருகிறார். அப்படியானால் மாநில அரசு ஜல்லிக்கட்டை நடத்தினால் அதற்கு மத்திய அரசு துணை நிற்குமா ? என இயக்குனர் கரு பழனியப்பன் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இது மாதிரி விளக்கம் வருவது எதிர்ப்பார்த்த ஒன்று. மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்குமென்பதை எப்படி புரிந்து கொள்வது. மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்தினால் மத்திய அரசு ஆதர்வாக இருக்குமா? என்ன சொல்கிறார் புரியவில்லை. இது பந்தை மாநில அரசு பக்கம் தள்ளிவிடும் செயல்

இளைஞர்கள் போராட்டகளத்தில் அமைதியாக இருக்கிறார்கள் , இந்திய அரசியலில் எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் மூன்று மணி நேரத்தில் வன்முறையில் வந்து முடிந்துவிடும். ஆனால் நான்கு நாட்களாக மாணவர்கள் அமிதியான போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் இருட்டில் தேள் கொட்டியது போல் அமைதியாக இருக்கிறார்கள்.

மத்திய அரசு மாநில அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்கும் என்கிறார்கள் , அப்ப நாளைக்கே ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்தால் மத்திய அரசு துணை நிற்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
