இசை மூலம் தமிழர்கள் மனதை கொள்ளை கொண்டவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், மேலும் இவர் வாங்கி குவித்த ஒவ்வொரு விருதிற்க்கும் அவரது புகழை மேலும் உயர்த்தியது இந்த தமிழர்களின் ரசனைதான்.
இப்போது ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டிற்காக இளைஞர்கள் மட்டும் இல்லாமல், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தமிழர்கள் என்கிற உண்மையான உணர்வுடன் வெய்யில், பணி , குளிர் என்றும் பாராமல் முழுமூச்சுடன் போராடி வருகின்றனர்.
தற்போது தன்னுடைய இசையை ஏற்று கொண்ட தமிழ் மக்களுக்காகவும், தானும் ஒரு தமிழன் என்கிற உணர்வுடனும் நாளை உண்ணாவிரதம் இருக்க போவதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் .
