நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் வரும் 22ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் வரும் 22ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2D என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜெய்பீம். படத்தில் பழங்குடியின மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

அவருடன் ரஜிஷா விஜ்யன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 2ம் தேதி படம் நேரடியாக அமேசானில் ரிலிசாக உள்ளது.

இந் நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை படக்குழு இன்று பூர்த்தி செய்திருக்கிறது. வரும் நவம்பர் 2ம் தேதி படம் வெளியாகிறது.

அக்டோபர் 15ம் தேதி ஜெய்பீம் டீசர் வெகு ஜனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னமும் இந்த படம் டிரெண்டிங் வரிசையில் இருக்கும் நிலையில் பட டிரெய்லர் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Scroll to load tweet…