JaiSulthan Hits 75 Million : கார்த்தியின் சுல்தான் படத்திலிருந்து வெளியான ஜெய் சுல்தான் பாடலை இதுவரை 75 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். 'கைதி' படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி 'சுல்தான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த திரைப்படம், பின்னர் தியேட்டர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 2ம் தேதி முதல் 'சுல்தான்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் விவேக்-மெர்வின் இசையில் அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய ஜெய் சுல்தான்' குத்தாட்ட பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. செம்ம துள்ளலான... எழுத்து ஆடவைக்கும் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.இந்த பாடலின் ரெக்கோர்டிங்கிற்காக 30 இசை கலைஞகளை ஒரு திரட்டி இந்த பாடல் உருவாகியுள்ளது.