Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim: ரியல் ஜெய் பீம் பார்வதியை சந்தித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.. கேட்காமலேயே உதவி செய்த ஹீரோ.!

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு நேற்று முன்தினம் 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவித்திருந்தார். ஆனால், சூர்யாவுக்கு முன்பே பார்வதியின் நிலையை அறிந்து வருந்திய நடிகர் ராகவா லாரன்ஸ், “பார்வதி அம்மாவுக்கு என் செலவில் வீடு கட்டி தருவதாக” ட்விட்டரில் அறிவித்தார்.

Jai Bhim: Actor Raghava Lawrence met Real Jai Bhim Parvathy .. Hero who helped without asking.!
Author
Cuddalore, First Published Nov 16, 2021, 8:27 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ரியல் ஜெய் பீம், பார்வதி அம்மாளை நடிகர் ராகவா லாரன்ஸ் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. என்றபோதிலும், உண்மை குற்ற நிகழ்வில், ராஜகண்ணுவை கொடூர மனித உரிமை மீறலை அரங்கேற்றியவர் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர்தான். ஆனால், அவருடைய பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும் சர்ச்சையானது. ராஜக்கண்ணு, பெருமாள்சாமி, சந்துரு போன்ற கதாபாத்திரங்களின் பெயர் மாற்றாத நிலையில் குற்றம் புரிந்தவர் பெயர் மட்டும் மாற்றாமல் விட்டதை ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.Jai Bhim: Actor Raghava Lawrence met Real Jai Bhim Parvathy .. Hero who helped without asking.!

இதற்கிடையே வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி சட்டி காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர். இதனையடுத்து அந்த காலண்டர் காட்சி நீக்கப்பட்டுவிட்டது. என்றாலும் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அக்கினி சட்டி காலாண்டருக்குப் பதில் மகா லட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்ற காணொலியில் பேசியது சமூக ஊடங்களில் வைரலானது. மேலும் பார்வதி இப்போதும் கூலித் தொழிலாளராக உள்ளார். அவருக்கு சூர்யா உதவ வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு நேற்று முன்தினம் 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவித்திருந்தார். ஆனால், சூர்யாவுக்கு முன்பே பார்வதியின் நிலையை அறிந்து வருந்திய நடிகர் ராகவா லாரன்ஸ், “பார்வதி அம்மாவுக்கு என் செலவில் வீடு கட்டி தருவதாக” ட்விட்டரில் அறிவித்தார்.Jai Bhim: Actor Raghava Lawrence met Real Jai Bhim Parvathy .. Hero who helped without asking.!

ஜெய்பீம் சர்ச்சை இன்னும் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதியையும் அவருடைய குடும்பத்தினரையும் சந்தித்து பேசியிருக்கிறார். வீடு கட்ட நிதி உதவி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதை பாஜகவினரும் பாமகவினரும் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இதுபோன்ற புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. அதேவேளையில் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நிஜ ஹீரோ நடிகர் ராகவா லாரன்ஸ். தன்னிச்சையாக அவர்களின் (பார்வதியின்) வீட்டிற்கு சென்று தேவையானவற்றை செய்துள்ளார்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios