ஏசி.மணிகண்டன் இயக்கி,  விஜய் பிரபு இசையில் தங்கப்பாண்டி தயாரித்துள்ள படம் 'ரூட்டு'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

பாடல் வெளிளயீடு விழாவில் தயாரிப்பாளர்கள், தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜாக்குவார்தங்கம் பெரிய கதாநாயகர்களின் படங்களை திரையிடுவதற்கு 3 ஆயிரம் தியேட்டர்கள் கிடைக்கின்றன.  ஆனால் சின்ன படங்களுக்கு 3 திரையரங்குகள் கூட கிடைக்கவில்லை என்று கோலிவுட் திரையுலகத்தில் அதிக தியேட்டர்களை பிடிக்கும் விஜய் அஜித், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களை சாடி பேசினார்.

இதுதான் இன்றைய சினிமாவின் அவலநிலை என்றும்,   பெரிய பாடங்களின் தயாரிப்பாளர்கள் சிறிய பட தயாரிப்பாளர்கள் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய தயாரிப்பாளர்கள் வழிவிடவேண்டும்.  கன்னடத்தில் படம் எடுத்தால் அங்கே உள்ள அரசாங்கம் ரூபாய் 10 லட்சம் தருகிறது. அதே போல் இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்ற ஒரு அரசாங்கம் வரும் அந்த அரசாங்கம் தமிழ் படங்களை காப்பாற்றும் என்று கருதுகிறேன் என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் ஆரி, பேசும்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு எம்ஜிஆர் தான்.  இப்போது எல்லோருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் என்று நினைப்பதால் தான் பல பிரச்சினைகள் உருவாகின்றன.

சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியல் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.  வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள் என்று கூறினார்.