நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில், தனுஷ் எழுதி, பாடி இருக்கும் 'நேத்து ஓர கண்ணில் நான் உன்னை பார்த்தேன்' என்று துவங்கும் பாடல் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில், தனுஷ் எழுதி, பாடி இருக்கும் 'நேத்து ஓர கண்ணில் நான் உன்னை பார்த்தேன்' என்று துவங்கும் பாடல் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'கர்ணன்' படத்திற்கு முன்னரே, 'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால், இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 

அதன்படி, ஜூன் -18 ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மொத்தம் 17 மொழிகளில், ஜகமே தந்திரம் படம் வெளியாகிறது. எத்தனையோ படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும், அதிக மொழிகளில் வெளியாகும் திரைப்படம், 'ஜகமே தந்திரம்' என்கிற சிறப்பும் இந்த படத்திற்கு உண்டு. மேலும் தனுஷ் ரசிகர்கள் பலர், வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் இந்த படத்தில் கலக்கி உள்ளதால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

'ஜகமே தந்திரம்' படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான, 'புஜ்ஜி' பாடல் வேற லெவலில் ரீச் ஆகியுள்ள நிலையில், அதை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் பாடலான 'நேத்து' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், நடிகர் தனுஷே இந்த பாடலை எழுதி - பாடியுள்ளார் என்பது இந்த பாடலின் தனி சிறப்பாகும்.

அந்த வீடியோ இதோ...