Asianet News TamilAsianet News Tamil

’தளபதி 63’ படத்தில் என் கேரக்டர் இதுதான்’...சீக்ரெட்டை லீக் செய்த வில்லன் ஜாக்கி ஷெராஃப்...

‘தளபதி 63’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் ஏற்றிருக்கும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் தனது வேடம் என்ன என்பது குறித்த விபரத்தையும், அப்பட இயக்குநர் அட்லி குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 

jackie shroff in thalapathi 63
Author
Chennai, First Published Apr 21, 2019, 10:13 AM IST

‘தளபதி 63’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் ஏற்றிருக்கும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் தனது வேடம் என்ன என்பது குறித்த விபரத்தையும், அப்பட இயக்குநர் அட்லி குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.jackie shroff in thalapathi 63

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்த ஜாக்கி ஷெராஃப் தற்போது தமிழில் ஒரே நேரத்தில், கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’, அட்லியின் ‘தளபதி 63’ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் படத்தில் நடிப்பது குறித்துப் பேட்டி அளித்த அவர்,’அட்லி துறுதுறுப்பான இயக்குநராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.

ஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா, வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் யோசிப்பேன். அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள்.jackie shroff in thalapathi 63

’தளபதி 63’படத்தில் கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக, விஜய்க்கு பல்வேறு வழிகளில் தொல்லை தருகிறவனாக  நடிக்கிறேன். பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் பகுதி அது. சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது’என்கிறார் ஜாக்கி ஷெராஃப்.

Follow Us:
Download App:
  • android
  • ios