தீபாவளிக்கு வெளியாக உள்ள அட்லி,விஜய் கூட்டணியின் சென்னை நகர விநியோக உரிமையை சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அற்விப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஜாஸ் சினிமாஸ்.இந்நிறுவனம் பல திரையரங்குகளை நடத்துவதோடு திரைப்பட விநியோகமும் செய்துவருகிறது.பல பெரிய படங்களை விநியோகம் செய்திருக்கும் அந்நிறுவனம் அண்மைக் காலத்தில் திரைப்பட விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது. அவ்வப்போது ஏதாவதொரு சிறு படத்தை ஏதாவது ஒரு பகுதியில் விநியோகம் செய்துவந்தது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் ’பிகில்’ படத்தின் மூலம் மீண்டும் விநியோகத் துறையில் இறங்கியிருக்கிறது.பிகில் படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னை நகர் உரிமை சுமார் எட்டு கோடி என்றும் சொல்லப்படுகிறது.இருப்பினும் இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனமோ ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.