அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர் ஆனந்த்ராஜை நினைவிருக்கும் தானே! அவர் எங்கே பிரசாரத்துக்கு சென்றாலும், சினிமாவில் அவர் பேசிய டயலாக்குகளை சொல்லச் சொல்லி கேட்கும் மக்கள் கூட்டம். அண்ணனும் அச்சுஅசலாய் அந்த சினிமா டயலாக்கை எடுத்துவிட்டு எக்கச்சக்க கைதட்டல் வாங்கியபடியே கட்சி வேலையையும் பார்ப்பார். அ.தி.மு.க.வில் இருந்த ஹீரோ நடிகர்களை விட இந்த வில்லன் நடிகருக்கு அதிக கூட்டம் கூடியதால் தலைமையும் இவருக்கு அதிக வாய்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, குழாயடி குழப்படியான அ.தி.மு.க.வில் ஆனந்த்ராஜ்-க்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்தது. இதனால் ‘கட்சி சரியில்லை, அதன் போக்கு சரியில்லை, மக்கள் வெறுக்கிறார்கள், அம்மாவின் பெயர் கெடுகிறது’ என்றெல்லாம் ஏக பில்ட் அப்களுடன் டயலாக்குகளை அள்ளிவிட்டார் அரசியலில். ஆனாலும் அவருக்கு உருப்படியான எந்த உயரமும் கிட்டவில்லை. 

இதனால் மீண்டும் சினிமாவில் பிஸியானார் மனிதர். தற்போது விமல் ஹீரோவாக நடித்திருக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் ஆனந்த்ராஜும் வெயிட்டான ரோல் செய்திருக்கிறார். டீசரில் பார்ப்பதற்கு சற்றே காமெடி கலந்த வில்லன் ரோல் போல் தெரிகிறது. விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ் பேசியிருக்கும் டயலாக்குகள் பெரும்பாலும் அய்யய்யே அசைவ ரகஙக்ளாக இருக்கின்றன. சாம்பிளுக்கு சில...

 

* நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணு பண்ணுவோமா?’ என்று லீடு ரோல் பொண்ணை பார்த்து கேட்கிறார், கைககளை வேறு லெவலில் வைத்தபடி. 

* பொம்பள அவ்வளவு பெருசு காட்டுறா, ஆம்பளைக்கு இத்தணூண்டு காட்டுறான். 

* நீயும் உங்க அக்காவும், போடுறதையே வேலையா வெச்சுட்டு இருக்கீங்க. 

* ஆக மொத்தத்துல  இந்த கதையில ஒரு பொம்பளையும், பொம்பளையா இல்ல. என்று நீள்கிறது. 

டீசரிலேயே இந்த அளவுக்கு ‘பெண் புராணம்’ பாடியிருக்கிறார் என்றால், படத்தில் எந்தளவுக்கு ஆனந்த் ராஜ் பேசியிருப்பார் என்பதுதான் இப்போது மேட்டரே. அம்பூட்டு வாய் பேசுன ஆனந்த்ராஜ் இப்போது ‘அடச்சீ...’ என்று பெயர் வாங்கியிருப்பதுதான் கால கெரகமே!