தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இன்று காலை முதல், வழக்கம் போல் படப்பிடிப்பு பணிகள் சுமூகமாக நடைபெற்று வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணமாக, வருமானவரித்துறை அதிகாரிகள், திடீர் என 'மாஸ்டர்' பட படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தனர்.

இதைத்தொடர்ந்து, வருமானவரித்துறையினர் நேரடியாக நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் அவரிடம், ஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததாக தகவல்கள் பரவின.

இன்று காலை முதலே ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியா, நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்த 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனால் நடிகர் விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளதாக கொடுத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியே கசிந்தன.

மேலும் வருமானவரி துறை அதிகரிகம் 'மாஸ்டர்' பட செட்டுக்குள் நுழைந்ததால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு, விசாரணை மேற்கொண்டு பின் தளபதி விஜய்யை, அவருடைய காரிலேயே வைத்து... அல்லாக்கா தூக்கி சென்றுள்ள சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.