'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மெல்லிசை' படம் மூலம், தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. 

பின்னர், 'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாணை வைத்து அவர் இயக்கிய 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவ்விரு படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ரஞ்சித் ஜெயக்கொடி, தனது அடுத்த படைப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். தற்காலிகமாக ’புரடக்‌ஷன் நம்பர் ஒன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.