ishwarya rai cry to meet her mother

பாலிவுட், கோலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவருடைய தாயார் பிருந்தா ராய், பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் என்னும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இங்கு தான் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன் பல வருடங்கள் வசித்தார். இதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சில வருடங்களுக்கு முன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தாய் தங்கியிருந்த 16 மாடிகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் 13வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்ததும் விரைந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிட கடுமையான போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்தச் செய்தியை அறிந்ததும், ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அவர் தாயைப் பார்க்க கதறி அடித்துக்கொண்டு வந்தார். பயத்தில் அழுத ஐஸ்வர்யா ராயை அவருடைய கணவர் சமாதானம் செய்தார். பின் தன்னுடைய தாயார் பத்திரமாக இருக்கிறார் என்று அறிந்ததும் சமாதானமடைந்து, அவரையும் தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு சென்றார். 

அதிருஷ்டவசமாக இந்தத் தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. கட்டடம் மட்டும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.