பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முதலாக தனது தந்தை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தனுஷ் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தையுடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆம், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் மிக முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.