சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் உலகிலேயே முதல்முறையாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதுதான் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்த டாக்குமெண்ட் படம்.

இதற்காக அவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு ஸ்டண்ட் கலைஞர்களின் வீட்டிற்கும், அவர்கள் வேலை செய்த இடத்திற்கும் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகின்றாராம்.

அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரிடம் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் தேசிய விருது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐஸ்வர்யாதனுஷ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.