ரஜினி மருமகன்னா என்ன கொக்கா?: தனுஷை நோக்கி பாயும் தோட்டாக்கள், அசுரனுக்கும் ஆப்பாம்!

தனுஷின் ரசிகர்கள் தாறுமாறாக எதிர்பார்த்த அவரது ‘என்னை நோக்கி  பாயும் தோட்டா’ படம் ரிலீஸாகவில்லை. வழக்கம்போல் பணப்பஞ்சாயத்தால் இந்த முறையும் சிப்புக்குள் முடங்கிவிட்டது. 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் கேங்ஸ்டர் டைப் படத்துக்காக லண்டனுக்கு பறந்துவிட்டார் தனுஷ். இன்னமும் அந்தப் படத்தின் ஷூட்டிங் அங்கே துவங்கவேயில்லையாம் முழுமையாக. ஆனால் சில பிக்கல் பிடுங்கல்களில் இருந்து தப்பிக்கவே தனுஷ் இப்படி கடல் தாண்டிப் பறந்தார் என்று தகவல். 

இந்நிலையில் விநியோகஸ்தர்கள் தொடர்பாக தனுஷ் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பஞ்சாயத்தை கூட்டியிருக்கின்றன. ’நம்மை விமர்சனம் பண்ணிட்டுதான் நைஸா கடல் கடந்து எஸ்கேப் ஆகிட்டாப்ல. ரஜினி மருமகன்னா என்ன பெரிய கொக்கா? அவரே இப்படி நம்மை சீண்ட மாட்டாரு. ஆனா இவரு உரசிப்பார்த்துட்டார். எப்படியும் சென்னைக்கு வந்துதானே ஆகணும்?” என்று  விமர்சனக் கத்தியை விசுக் விசுக்கென கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு பணப்பஞ்சாயத்துக்களே ஓய்ந்து, என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸுக்கு தயாரானாலும் கூட இந்த டீம் அந்தப் படத்தை அவ்வளவு எளிதாய் பாய விடமாட்டார்கள் போலிருக்கிறது. 

அதேபோல், தனுஷின் அடுத்த படமான அசுரனுக்கு ஆப்பு ஒன்றை அரேஞ்ச் செய்து கொண்டிருக்கிறது இதே கோஷ்டி என்று தகவல். பங்கம்டா!