பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவுக்கு பாடல் எழுத மணிரத்னம் வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில் அது பற்றி வாய் திறக்காமல் சின்மயி இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வைரமுத்து பெண்களிடம் தவாறக நடந்து கொள்பவர் என்று கூறி கடந்த ஆண்டு ஒட்டு மொத்த தமிழ் திரையுலக மற்றும் அரசியல் உலகை அதிர வைத்தவர் சின்மயி. தினமும் ஒரு பெண்ணின் சேட்டிங் டீடெயிலை வெளியிட்டு பாருங்கள் வைரமுத்துவின் கொடூரத்தை என்று தோலுரித்தவர். ஆனால் இந்த விவகாரத்தில் யாரும் வைரமுத்துவுக்கு எதிராக வெளிப்படையாக புகார் அளிக்க வரவில்லை. அதனால் அந்தவிஷயமும் அமுங்கிவிட்டது.

ஆனால் சின்மயி அவ்வப்போது வைரமுத்துவுக்கு எதிராக ட்வீட் செய்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் வைரமுத்துவை வைத்து நிகழ்ச்சி நடத்தும் பாண்டேவை கூட கேள்வி கேட்டார். எப்படி ஒரு மீ டூ அக்யூஸ்டை வைத்து நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுக நிகழ்ச்சிகளில் வைரமுத்து கலந்து கொள்வதை கூட சின்மயி சர்ச்சையாக்கினார்.

இந்த நிலையில் வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக மணிரத்னம் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் சுமார் 10 பாடல்களை வைரமுத்து எழுத உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் சின்மயி தற்போது வரை வாய் திறக்கவில்லை. பாண்டே, ஸ்டாலினை கேள்வி எழுப்பிய சின்மயி மணிரத்னம் என்றால் மட்டும் பொட்டிப் பாம்பாக அடங்கியிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மீ டூ அக்யூஸ்டான வைரமுத்துவுடன் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்னம் இணைந்து பணியாற்றுவது குறித்து ஏன் தற்போது வரை சின்மயி மவுனம் காக்கிறார். அட்லீஸ்ட் பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு ட்வீட் கூட போடவில்லை. ஏன் என்று விசாரித்த போது சில நாட்கள் ட்விட்டர் பக்கத்திற்கு சின்மயி லீவு விட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது சரி தெய்வம் தந்த பூவே எனும் பாடல் மூலம் சின்மயிக்கு திரையுலகில் அடையாளம் தந்தவர் அல்லவா மணிரத்னம்? அதை எப்படி மறப்பார் சின்மயி.