பிக்பாஸ் அல்டிமேட்டில் லவ் டிராக் இல்லை என கவலை கொள்ளும் வனிதா..நிரூப் - அபிராமியை டார்கெட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது..
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி (Suresh chakravathy), சுஜா வருணி (suja varunee) ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெல்லும் போட்டியாளர், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும். அதுமட்டுமின்றி அவரை அந்த வாரம் முழுவதும் யாரும் எவிக்ட் செய்ய முடியாது.

அந்த வகையில் இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் வனிதா (Vanitha) மற்றும் சுருதி (Suruthi) ஆகியோர் விளையாடுகின்றனர். கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டில் வனிதா போங்காட்டம் ஆடியதை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்து விடுகின்றனர். இதையடுத்து இருவரையும் மீண்டும் ஆட வைக்கலாம் என ஹவுஸ் மேட்ஸ் சொல்ல அதற்கு வனிதா, ஆட முடியாது என முரண்டு பிடிக்கிறார்.
இதுகுறித்த வாக்குவாதம் ஷாரிக் -வனிதா இடையே முற்றுகிறது..அதோடு ஷாரிக் தைரியம் இருந்த முன்னாடி வந்து பேசும்மா என் ஒருமையில் திட்டுகிறார்.. இதனால் குழப்பமடையும் வனிதா பிக்பாஸ் சீக்ரெட் அறைக்கு சென்று பிக்பாஸிடம் தன எந்த தவறும் இழைக்காமல் கார்னர் செய்யப்படுகிறேன் என கூறி கதறி அழுகிறார்..இந்த காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வைரலானது.
இதற்கிடையே ஒரு டாஸ்கின் போது..அபிராமி..நிரூப்பின் முன்னாள் காதலி என்பதை கூறியிருந்தார்.இதனை மனதில் வைத்திருந்த வனிதா..இந்த எபிசோடில் காதல் டிராக் இல்லை என கூறி நிரூபை குழப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.. அதோடு பாலா-அபிராமி மீது க்ராஸில் இருப்பது போலவும் சித்தரிக்கிறார் வனிதா..
