indian movie important charge

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன்.

தற்போது 2.0 ரிலீசுக்குப் பின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்தப் படத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தை முதலில் தில் ராஜீ பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சில காரணத்தால் இந்தப் பட நிறுவனம் ஒதுங்கி விட்டதாகவும் 2.0 படத்தை தற்போது தயாரித்து வரும் லைகா நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.