Asianet News TamilAsianet News Tamil

இந்தியன் 2 படப்பிடிப்புக்கு தயாரான கிரேன் விழுந்து 3பேர் மரணம்.!!சினிமா உலகமே சோகத்தில் முழ்கியது.!!

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இதற்கான சினிமா செட் அமைக்கும் பணி நடைபெற்ற போது கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3பேர் துடிதுடிக்க இறந்தனர்.இச்சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Indian crane falls, shooting crane falls, 3 killed. !!
Author
Chennai, First Published Feb 20, 2020, 12:13 AM IST

 T.Balamurukan

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இதற்கான சினிமா செட் அமைக்கும் பணி நடைபெற்ற போது கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3பேர் துடிதுடிக்க இறந்தனர்.இச்சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Indian crane falls, shooting crane falls, 3 killed. !!

இந்த படத்திற்காக  சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் இன்று செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios