இந்தியன் -அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.  


இந்தியன் -அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் 73 வயதான பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு.

ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்து வந்தார். 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதிலிருந்து சமீபத்தில் மீண்டார்.

நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.