இயக்குநர் ஷங்கர் படத்தில் வரும் திடீர் ட்விஸ்ட் போலவே டிராப் ஆகும் இறுதி நிலையில் இருந்த ‘இந்தியன் 2’படம் திரும்பத் தொடங்குவதற்கான 100 சதவிக்த சாத்தியங்கள் உருவாகியிருப்பதாக லைகா, மற்றும் கமல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

’இந்தியன் 2’வை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இயக்குநர் ஷங்கர், கமல், தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் ஆகியோர் ஒருவருக்கொருவர் சுத்தமாக பேச்சு வார்த்தையில் இல்லை. ஏனெனில் கமல் தனது பிக்பாஸ் பஞ்சாயத்துகளில் பிசியாக இருப்பார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டார் ஷங்கர்.இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் தகவல் வந்த நிலையில், திடீரென உஷாரான கமல் ‘இனி குழப்பம் வேண்டாம். வேலைகளத் தொடங்குங்கள். ஷூட்டிங்குக்கு வரவேண்டிய நேரத்தில் நான் வந்து சேருவேன்’என்று பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.

இப்போதைய நிலவரப்படி ஆகஸ்ட் முதல்வாரத்தில் கமல் இல்லாத போர்ஷன்களின் படப்பிடிப்பு துவங்க, அம்மாத இறுதியிலிருந்து கமல் கலந்துகொள்ளவிருக்கிறாராம். இன்னும் குறைந்தது ஒரு வருடத்துக்கு ஷங்கரின் அடுத்த படத்தில் விஜய்,பிரபாஸ், அல்லு அர்ஜூன், அஜீத் என்று ஜல்லி அடிக்கமுடியாது.