Asianet News TamilAsianet News Tamil

கமலின் 'இந்தியன் 2' வை காற்றில் பறக்க விட்ட இயக்குனர் ஷங்கர்..!

indian 2 movie promotion in baloon
indian 2 movie promotion in baloon
Author
First Published Jan 27, 2018, 7:06 PM IST


2.0 படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகளில் பிஸியாக இருக்கும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனை வைத்து 'இந்தியன்' படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டை நேற்று தன்னுடைய ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். 

அதில் இயக்குனர் ஷங்கர் மற்றும் அவருடைய குழுவினர் தாய்லாந்தில் சிறிய ஏறி பலூனில் 'இந்தியன் 2' இன் தைவான் என எழுதி அதனை பறக்க விட்டுள்ளனர். அந்த வீடியோவையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார்.

சிறிய பலூன் மூலம் 'இந்தியன் 2' படத்தின் புரோமோசனை ஆரம்பித்துள்ள இயக்குனர் ஷங்கர் மற்றும் படகுழுவினர் விரைவில் இந்த படம் குறித்து பல தகவல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios