இந்தியன் 2 படத்தில் ஏற்கனவே நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த் ஆகியோர் இணைந்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன்.

லஞ்சம், ஊழல், தேசப்பற்று ஆகியவை பற்றி மையப்படுத்தி, காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம்.   இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு முடிவுதார் இயக்குனர் ஷங்கர். கமலை கதாநாயகனாக வைத்து, கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் 'இந்தியன் 2 '  படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு துவங்கிய வேகத்திலேயே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.   இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் மீண்டும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளை படக்குழு கமிட் செய்துள்ளனர். ஏற்கனவே, இந்த படத்தில், பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.