நடிகர் கமலஹாசன் தற்போது தீவிரமாக கவனம் செலுத்திவரும் திரைப்படம் 'இந்தியன் 2 ' இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதில் நடிகை பிரியா பவானி சங்கர், மற்றும் சித்தார்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ப்ரீத் சிங், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கமிட் ஆகி உள்ளனர்.

இந்த மாதத்தின் இறுதியில், நடிகர் கமலஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர் விவேக் தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.