Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் வேகமெடுக்கும் கொரோனா! இதே நிலை நீடித்தால் இது தான் ஒரேவழி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை இயக்குனர்!

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
 
increased corona case in pondicherry day by day
Author
Chennai, First Published Jun 4, 2020, 1:16 PM IST

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

இதை தொடர்ந்து, யூனியன் பிரதேசமான புதுவையிலும் மெல்ல மெல்ல வேகம் எடுத்துள்ளது கொரோனா வைரஸ். சென்னையில் இருந்து, புதுவைக்கு வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

increased corona case in pondicherry day by day

கடந்த ஒரு வாரமாகவே, கொரோனாவால் புதுவையில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மொத்தம் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டு வரும் புதுவை அரசு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர்... குடும்பத்தினர் மற்றும் அவர் சார்ந்த அனைவரையும் தனிமை படுத்தி, கொரோனா பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, புதுவைக்குள் காரணம் இன்றி யாரையும் அனுமதிக்கவும் மறுக்கின்றனர்.

increased corona case in pondicherry day by day

இந்நிலையில், இதுகுறித்து  தெரிவித்துள்ள புதுவை சுகாதார துறை இயக்குனர், இதே நிலை நீடித்தால்... புதுவை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றுவது தான் ஒரே வழி, என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios