நயன்தாராவை நான்கு நாட்களுக்கு ஒரு காதலனுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டு வந்தாலும் விக்னேஷ் சிவனை இனி அவர் விட்டு விலகுவதாய் இல்லை. 

நயன்தாராவை நான்கு நாட்களுக்கு ஒரு காதலனுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் கிளப்பப்பட்டு வந்தாலும் விக்னேஷ் சிவனை இனி அவர் விட்டு விலகுவதாய் இல்லை. இந்த நிலையில் தான் காலையில் காதலனுடனும் மாலையில் விஜயுடன் சேர்ந்து அதகளப்படுத்தி வருகிறார் நயன்தாரா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அவருடன் இருந்து உற்சாகமாக கொண்டாடினார் நயன்தாரா. அந்த வகையில் இந்த ஆண்டும் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பான ஆண்டு. ஆம் இயக்குநராக இருந்து வந்த சிவனை நெற்றிக்கண் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார் நயன். 

அந்த உற்சாகத்தில் விக்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நயன் ‘என் அன்பான தயாரிப்பாளருக்கு’என வாழ்த்தியுள்ளார். இன்று காலை விக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தது. #HBDVigneshShivN என்கிற ஹேஸ்டேக் முதலிடத்தில் இருந்தது. 

இந்நிலையில் நயன்தாரா விஜயுடன் நடித்துள்ள பிகில் படத்தின் உனக்காக சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இப்போது விஜயுடன் நயன்தாரா ஜோடியாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இன்று காலை காதலன் விக்னேஷுடனும் மாலையில் விஜயுடனும் இணைந்து சமூக வலைதளங்களில் உலா வருகிறார் நயன்தாரா..!