In the four days of the screen it earned Rs 10 crore

’துப்பறிவாளன்’ திரைப்படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாம்.

தமிழ்த் திரையுலகில் எதார்த்த கதைகளை விசித்திரமான முறையில் எடுப்பவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய், இயக்குநர் கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஷாலுக்கு சற்றே வித்தியாசமான கதாபாத்திரமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துப்பறிவாளனாக விஷால் தெரியவில்லை மிஷ்கின் தான் தெரிந்தார் என்பது மக்களின் கருத்து. இதில் விஷாலுக்கு பதில் மிஷ்கினே நடித்து இருக்கலாம் என்பது மக்களின் மைன்ட்வாய்ஸ் தான்.

இந்தப் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் உட்பட விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.