In the first film the son of superstar who sang the song ...
நடிக்கும் முதல் படத்திலேயே சொந்தமாக பாட்டு எழுதி, பாடியும் உள்ளார் நடிகர் பிரணவ் மோகன்லால்.
வாரிசுகள் ஹீரோக்கள் வரிசையில் தற்போது புதிதாக களமிறங்கியிருப்பவர் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ்.
தற்போது பிரணவ் ‘ஆதி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ‘த்ரிஷ்யம்; பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்தப் படம் இசை, ஆக்ஷன் என இரண்டும் கலந்து உருவாகி வருகிறது.
இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரணவ், தனது முதல் படத்திலேயே, அதில் இடம்பெறும் ஆங்கில பாடல் ஒன்றை எழுதியுள்ளதோடு, அதை தானே பாடியும் உள்ளார்.
அந்தப் படத்திற்கு அனில் ஜான்சன் என்பவர் இசையமைத்து வருகிறார்.
இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
