In ileanas official instagram page she wrote a caption as photo by hubby
என்ன இலியானாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? இதுதான் நேற்று பலருக்கும் தோன்றிய வியப்பான கேள்வி. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை..
விஜய் உடன் நண்பன் படத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் ரொம்பவே பிஸியான நடிகையாக வலம் வரும் இவர், நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடியதை ஒரு படமாக வெளியிட்டார்.
இலியானா தனது இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ள அந்தப் படத்தில், இந்த ஆண்டின் சிறந்த நாள், கிறிஸ்துமஸ், மகிழ்ச்சியான விடுமுறை, வீடு, ஹப்பி(காதல் கணவர்) எடுத்த புகைப்படம் இது - என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் இலியானாவுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
