ilayaraja issue sbb request for our fans



இசைஞானி இளையராஜா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாடகர் எஸ்.பி.பிக்கு தன் பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல்  பாடக்கூடாது என நோட்டீஸ் விட்ட செய்தி தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனைக்கு குறித்து பல ரசிகர்கள் தங்களுடைய கண்டனத்தை இளையராஜாவிற்கு தெரிவித்து வருகின்றனர், அதே போல் திரையுலகினரும் இது பற்று வெளிப்படையான கருத்துக்களை  கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்னையை  பெரிதுபடுத்தவேண்டாம் என்றும் நடப்பது வருத்தமளிக்கும் நிகழ்வாக இருந்தாலும் மீடியாக்களும் இதை  தயவு செய்து  விட்டுவிடுங்கள் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய முக நூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.