ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவிழா இசையமைக்க இளையராசா ஒப்புதல் தெரிவித்து மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார்.
இசைஞானியின் இசையென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் பல இசையமைப்பாளர் அவருடன் பயணிக்கும் இனிய தருணத்திற்காக காத்து தான் கிடக்கின்றனர். 80கள் முதல் இன்று வரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக இசையமைப்பாளர்களை கவிர்ந்து வருபவர் இளையராஜா..அவரின் தனித்துவமான மெட்டுக்கள் யாருக்குத்தான் பிடிக்காது.
30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிகரில்லா இசை ராஜ்யம் நடத்தி வரும் இளையராஜா மேலும் ரசிகர்ளை மகிழ்விக்க வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அனிரூத் ஆகியோர் துபாயில் நடைபெறும் இளையராஜாவின் கச்சேரியில் சமீபத்தில் பங்களித்தனர்.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளத்திற்கு இடையே இருவரும் தங்களது இசை மாலையை பொலிந்திருந்தனர். இதையடுத்து துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்தார் இளையராஜா. அங்கு ஒவ்வொரு இடத்தையும் மிகவும் ஆர்வமாக சுற்றிப்பார்த்த இசைஞானி அந்த ஸ்டுடியோ குறித்து பலவாறு பாராட்டி புகழ்ந்துள்ளார்..
இதையடுத்து ஃபிர்டாஸ் ஸ்டூடியோவில் இளைய ராஜாவுடன் இசைப்புயல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து : “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இளையராஜ ' கோரிக்கை ஏற்கப்பட்டது என பதிவிட்டு ஏ.ஆர்.ரகுமானை டேக் செய்துள்ளார்..
