தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் திரையுலகில் உச்ச நடிகையாக விளங்கிய ஸ்ரீ தேவியின் மறைவு ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீ தேவிக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் இளையராஜா கூறியிருப்பதாவது... 

இந்தியாவிலேயே மிகவும் சிறந்த நடிகையாக விளங்கிய ஸ்ரீ தேவி மறந்து விட்டார் அதற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ தேவி நடித்த படங்களில் அதிகமான படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவருடைய பல படங்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் ஸ்ரீ தேவியுடன் பேசி பழகியுள்ளேன் என்று சொல்வதுக்கு எந்த ஒரு நினைவுகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு முறை 'மூன்றாம் பிறை' பாடல் பதிவிற்காக பாடலுடன் சேர்ந்து வசனங்கள் பேச இருந்ததால் ஸ்ரீ தேவி மற்றும் கமலஹாசன் இருவரும் இணைந்து ஸ்டுடியோவிற்க்கு வந்திருந்தனர். அப்போது போட்டி போட்டுக்கொண்டு தனக்கு எப்படி பாடல் காட்சிகளில் அந்த வசனம் இடம்பெற வேண்டுமோ அதே போல் அற்புதமாக ரெகார்டிங்கிற்க்கு ஒத்துழைத்தனர் என கூறியுள்ளார்.

ஸ்ரீ தேவியை குழந்தை முதலே தெரியும் என கூறி இதுவரை எங்கும் வெளிப்படுத்தாத ஒரு நிகழ்வை பற்றியும் தெரிவித்துள்ளார் இளையராஜா. 

'நான் கிட்டார் உள்ளிட்ட சில எலெக்ரானிக் கருவிகளை இசையமைபாளர்களிடம் வாசித்துக் கொண்டிருந்த போது, ஜி.கே.வெங்கடேசன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினேன். அப்போது இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் அந்த பக்கமாக வருவார்கள் அதில் ஒருவர் நடிகை ஸ்ரீ தேவி.

சிறு இடைவேளை கிடைக்கும் போது பிரபல ஸ்டுடியோவில் நடிக்கும் சினிமா ஷூட்டிங் சென்று பார்போம். அப்போது தான் ஸ்ரீ தேவியை குழந்தை நட்சத்திரமாக அங்கு பார்த்தபோது, 'லவ குசா' என்கிற காதாப்பாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பின் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்தார் எனக் கூறி இளையராஜா வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.