Asianet News TamilAsianet News Tamil

Ilaiyaraaja : காப்புரிமை விவகாரம்... இளையராஜா தொடர்ந்த வழக்கில் இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Ilaiyaraaja : 30 படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

Ilaiyaraaja files appeal in High Court to retain digital rights over his songs
Author
Tamil Nadu, First Published Apr 5, 2022, 12:01 PM IST

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வெளியான 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்று உள்ளதால், இந்தப் படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மேற்கண்ட 30 படங்களுக்கான இசையை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரண்டு இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

Ilaiyaraaja files appeal in High Court to retain digital rights over his songs

இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சரவணன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்ச்செல்வி, துரைசாமி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக இந்தியன் ரெகார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படியுங்கள்... Actor Vijay : 10 ஆண்டுகளாக பிரஸ் மீட்டில் பங்கேற்காததற்கு அந்த ஒரு சம்பவம் தான் காரணம் - விஜய் பளீச் பதில்

Follow Us:
Download App:
  • android
  • ios