If you spread the wrong rumor about me - rana anger

என்னைப் பற்றி தவறான வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பாகுபலி வில்லன் ராணா எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே டோலிவுட்டில் போதை மருந்து பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தெலுங்கு நட்சத்திரங்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் புரி ஜகநாத் உள்ளிட்ட 12 பேர் மீது போதை மருந்து புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் போதை மருந்து தடுப்பு பிரிவு அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த பரபரப்பு தற்போது ஓய்ந்திருந்த நிலையில் நடிகர் ராணாவுக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் பற்றி தகவல் அறிந்த அமலாக்க அதிகாரிகள் ராணாவிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை சிலர் போதை மருந்து விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த ராணா, “எனக்கு ஒரு பார்சல் வந்தது உண்மைதான். எனது அறைக்கு தேவையான மரச் சாமான்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை.

இதை பெரிய விவகாரம்போல் சித்தரிப்பதும், ஊதி பெரிதாக்குவதும் சரியல்ல. தவறான வதந்தியைப் பரப்புவோர் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’’ என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டார் ராணா.