கணவர் அடித்தால் திருப்பி ஓங்கி அடியுங்க...!  நடிகை வரலட்சுமி பளார் பளார்..!

 மார்ச் 8 ஆம் தேதி வருடம் தோறும் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட வரலட்சுமி,கணவர்  அடித்தால் திருப்பி அடியுங்கள்...சும்மா இருக்க வேண்டாம் என தெரிவித்து உள்ளார்

பெண்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி, சேவ் சக்தி (SaveSakthi) என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த  அமைப்பு சார்பாக,மகளிர் தினத்தை முன்னித்து நடத்தப்பட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமி குடும்ப பெண்களுக்கு அறிவுரை  வழங்கினார்  

அப்போது, ஒரு உயிரை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது... நாட்டில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றால்,முதலில் வீட்டில் பெண்களை  ஆண்கள் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என பேசினார்

 மேலும்,கணவர் அடித்தால்,அமைதியாக இல்லாமல் திருப்பி அடியுங்கள் என்றும் தெரிவித்தார்.விழாவில் கலந்துக்கொண்ட பெண்களுக்கு வரலட்சுமி பரிசு பொருட்களை வழங்கினார்