*சூர்யாவும், வெற்றி மாறனும் இணையும் புதிய படமான ’வாடி வாசல்’ படத்தின் கதை ஒரு நாவலை மையப்படுத்தியது என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், அந்தக் கதை தன்னுடையது! என்று கொதிக்க துவங்கியுள்ளார் புவி! எனும் உதவி இயக்குநர். சூர்யாவை வைத்து இயக்குவதற்காக அந்த கதையை இரண்டு வருடங்களுக்கு முன் சூர்யாவின் அலுவலகத்திடம் கொடுத்தார்! அதை மாத்து இதை மாத்துன்னு சொன்னவங்க, ஒரு கட்டத்துல அந்த ஸ்கிரிப்ட் புக் தொலைஞ்சிடுச்சு!ன்னு கையை விரிச்சாங்க.  அந்த கதை, அதே தலைப்பை இப்ப வெற்றிமாறனை வெச்சு எடுக்கிறாங்க!  என்கின்றனர் புவியின் நண்பர்கள். (யூ டூ சூர்யா?)

*வடிவேலு உச்சத்துக்கு வந்ததும் ’ நான் சின்ன நடிகனா இருந்தப்ப, காமெடி நடிகர் கவுண்டமணி என்னை ஸ்பாட்ல அலட்சியமும், அசிங்கமும் படுத்தியிருக்கிறார்.’ என்று பழையை கதையை கிளப்பிவிட்டார். இப்போது யோகிபாபுவும் அதே ஸ்டைலில் ஒரு கதை சொல்கிறார். ஆனால் யோகி இடிப்பதோ பழைய காமெடி நடிகரையெல்லாம் இல்லை, மாஸ் ஹீரோ ஒருவரை. (ஃப்ரீயா வுடு பாபே! சரக்கு ஒன்து, சைடு டிஷ் அவரோடதுன்னு ஒரு காலம் வராமலா போயிடும்)

*அசுரன் பட வெற்றிவிழாவில் நடிகர் பவன் விஜய்யின் பழைய படம் ஒன்றை பற்றி வம்பிழுத்துப் பேசிவிட்டார். இது மேடையிலிருந்த தனுஷுக்கு பெரும் தர்ம சங்கடத்தை கெளப்பிவிட்டது. இதனால் விஜய் தரப்பின் கவனத்துக்கு போகும் வகையில் ‘எனக்கும் அந்த பேச்சுக்கும் எந்த சம்பதமும் இல்லை!’ என்று தூது அனுப்பிவிட்டாராம். 
(ஏன் தனுஷ்? தளபதி வெச்சு செஞ்சுடுவார்னு பயமா?)

*தர்பார் படத்தின் ஆன்லைன் பிரிண்ட்டை சி.டி.யில் காப்பி போட்டு பலருக்கு ஃப்ரீயாக சப்ளை செய்ததாம் ஒரு டீம். இதன் மூலம் லைக்கா நிறுவனம் செம்ம அப்செட், பிளஸ் லாஸ். ரஜினி மீது அரசியல் வெறுப்பில் இருக்கும் கட்சிகள் இப்படியா தங்களது பழிவாங்கலை காண்பித்து எங்கள் வயிற்றில் அடிக்கணுமா? என்று புலம்புகிறார்கள். 


*ஏஸியா நெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே சொன்னது போல் ’மாஸ்டர்’ படத்தின் பிரேக் சமயங்களில் வரிசையாக இயக்குநர்களை வரச்சொல்லி கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். யாரை டிக் அடிக்கப்போகிறார் என தெரியவில்லை. பாண்டிராஜ், பேரரசு வரிசையில் இப்போது சிவகார்த்தியின் நண்பரான கனா அருண்ராஜா காமராஜ், மகிழ் திருமேனி ஆகியோரும் இணைந்துள்ளனர். (அருண் இயக்குனா தளபதி படத்துல சிறப்பு தோற்றத்தில் சிவா வருவாப்ல!) 
-    
- விஷ்ணுப்ரியா