"பிரதமருக்கு எதிராக எதுவும் பேசவில்லை"...சரண்டர் ஆன எஸ்.பி.பி... திடீர் பல்டிக்கு காரணம் என்ன தெரியுமா?


காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 19ம் தேதி பாலிவுட் பிரபலங்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். பிரதமரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான், அமீர் கான் உடன் கங்கனா ரணாவத், போனி கபூர், சோனம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பிரபலங்களை அழைக்காதது கவலை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அதில் அக்டோபர் 29ம் தேதி பிரதமர் அளித்த விருந்தில் நான் பங்கேற்றேன். பிரதமர் வீட்டிற்குள் நுழையும் போது எங்கள் அனைவரின் செல்போன்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கி வைக்கப்பட்டன. ஆனால் அதே நாளில் பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள் சிலர் எடுத்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலானது. சில விஷயங்கள் நம்மை வாயடைக்க வைக்கும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் பிரதமர் மோடி வீட்டிற்குள் செல்போன் கொண்டு செல்ல பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எஸ்.பி.பி. கூறிய குற்றச்சாட்டால், மோடி அரசு தென்னிந்திய நடிகர்களை பாரபட்சமாக பார்க்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. 

இதனால் பதறிப்போன எஸ்.பி.பி., என் செல்போனை பறித்துக் கொண்டார்கள், அதனால் நான் பிரதமர் மீது அதிருப்தியாக இருக்கேன்னு நீங்க தான் சொல்லுறீங்க, நான் எப்போ பிரதமருக்கு எதிராக பேசினேன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாலிவுட் ஸ்டார்களையும் நான் விமர்சிக்கவில்லை, செல்போன் எடுத்துக்கிட்டு போக அனுமதிக்கல, அதனால என்னால செல்ஃபி எடுக்க முடியலன்னு சொல்ல வந்ததேன் அவ்வளவு தான் என விளக்கம் அளித்துள்ளார். விருந்தின் போது நடந்ததை மட்டுமே கூறினேன். சிலர் செல்ஃபி எடுத்த போது, எங்களுக்கு மட்டும் ஏன் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என்று தான் கேட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.