i want cigarete julee talk aarav
தற்போது பிக் பாஸ் குக்கிங் டீமில் இருக்கிறார் ஜூலி. இதே டீமில் தான் ஆரவும் உள்ளார். நேற்றைய முன் தினம் அனைத்து போட்டியாளர்களும் உலக நாயகன் கமலஹாசனின் "விருமாண்டி" கெட் அப்பில் கமலின் பாடலுக்கு டான்ஸ் ஆடினர்.
இந்நிலையில் நேற்று படையப்பா ரஜினி கெட் அப் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட் அப்பில் அனைத்து போட்டியாளர்களும் சூப்பர் ஸ்டாரின் பாடலுக்கு நடனமாடினார்.
இதற்கு இடையில் சமையல் செய்துக்கொண்டிருக்கும் போது ஜூலி ஆரவிடம்... எனக்கு ஒரு தம் வேண்டும் என கேட்கிறார், அதற்கு ஆரவ் இந்த பழக்கம் எல்லாம் உனக்கு இருக்கா என கேட்க... மிகவும் வெட்கப்பட்டு கொண்டு... இந்த கெட் அப்பில் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடித்தால் செம கெத்தாக இருக்கும் என்பது போல் சொல்கிறார்.
ஆனால் பார்ப்பவர்களுக்கு... ஜூலி இப்படி வழிந்துக்கொண்டே பேசியது கடுப்பை கிளப்புவது போல் இருக்கிறது என்று பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
