‘அரசியல்வாதிகளின் இதயம் எப்போதும் மக்களுக்காக துடித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடம் அடிக்கடி சொல்வார். அவரது அதே குணத்தை அப்படியே பவண் கல்யாணிடம்தான் பார்க்கிறேன்’ என்கிறார் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், பவனின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவருமான ராம் மோகன ராவ்.

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கைப் பெற்றவரும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம மோகனராவ் நடிகர் சமீபத்தில்  பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோகராக நியமிக்கப்பட்டார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாகவும், ரஜினி பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சொந்த மாநிலத்தில் அரசியல் செய்ய முடிவெடுத்த ராம் மோகன ராவ் பவனுடன் இணைந்தார். ’ஒரு நடிகராக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பவன் கல்யாண். கட்சியையும் அவரையும் வழி நடத்த அவரே விரும்பி கேட்டுக்கொண்டதால்தான் ஜன சேனாவில் இணைந்தேன். அவரை பல விசயங்களில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு சொல்ல முடியும். முக்கியமாக அரசியல்வாதிகள் இதயம் மக்களுக்காக துடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அவரது சொல்லுக்கு சற்றும் குறைவைக்காதவர் பவன்.

அது மட்டுமல்ல, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் மக்கள் பற்றியே எப்போது சிந்திக்கும் குணம் உட்பட இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு. ஜெயலலிதாவுடன் எப்படி அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தேனோ அப்படி கடைசிவரை பவனுடன் இருந்து அவரது ஆலோசகராக இருக்கவிரும்புகிறேன்’ என்கிறார் ராம் மோகன ராவ்.