* தமிழ் சினிமாவின் ஹாட் நடிகையாக வலம் வந்த சோனா மலையாளத்தில் பிரதாப் போத்தனுடன் நடித்த ‘பச்ச மாங்கா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ஷகிலாவை மிஞ்சிட்ட சோனா’ என்று ரசிகர்கள் கன்னாபின்னான்னு கமெண்ட் போடுகிறார்கள். டென்ஷனான சோனாவோ ‘இனி கவர்ச்சியா நடிக்க மாட்டேன் என்று நான் உறுதியெடுத்து இரண்டு ஆண்டுகளாச்சு. அதை மீறலை. இந்தப் படம் அதுக்கு முன்னாடியே எடுக்கப்பட்டது’ என்கிறார். (நம்பிட்டோம்)

* ஒரு காலத்தில் நம்ம ஊர் நடிகைகள் ‘ராமாயணம் அப்படின்னா இன்னா? மஹாபாரதம் கிலோ என்ன விலை’ என்றெல்லாம் சீன் போட்டு கேள்வி கேட்பார்கள். ஆனால், இப்போது நிலைமை தலை கீழ். பீரியட் மற்றும் இதிகாச கதைகள் படமாக்கப்படும் காலம் இது. அந்த வகையில் பொன்னியின் செல்வனில் ‘குந்தவை’யாக நடிக்கும் த்ரிஷாவோ, பொன்னியின் செல்வன் நாவலை மாய்ந்து மாய்ந்து வாசிக்கிறாராம். அதை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுளார். (த்ரிஷா புக்கை தலைகீழா பிடிச்சிருக்கீங்க)

* வட சென்னை படத்தில் நடித்ததன் மூலம் சக இயக்குநர் வெற்றிமாறனின் பெரும் விசிறியாகிவிட்டார் இயக்குநர் அமீர். இந்நிலையில் வட சென்னை படத்துக்கு மூன்று தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் கிடைக்கவில்லை. அசுரனுக்கு அதுகிடைக்காவிட்டால் தேசிய விருதை புறக்கணிப்போம்.’ என கொளுத்திப் போட்டுள்ளார். (அண்ணே, பருத்திவீரன் 2 எப்ப?)

* அசுரன் படத்தை அச்சு அசலாக தெலுங்கில் ரீமேக் பண்ணுகிறோம் என்று கிளம்பியது அக்கட ஹீரோ வெங்கடேஷின் டீம். படத்தின் பெயர் ‘நரப்பா’. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் ஈர்க்கவில்லை!. ‘எங்கள் தனுஷ் அளவுக்கு வெங்கடேஷ் இல்லை’ என்று தமிழ் ரசிகர்கள் நக்கலடிக்க, இதற்கு வெங்கடேஷின் ரசிகர்கள் பதிலுக்கு தாக்கியுள்ளனர். இந்த மோதல் முற்றும் நிலையில் இதை பைத்தியக்காரத்தனமான சண்டை! என திட்டியுள்ளார் நடிகர் சிதார்த். (சித்து உங்களுக்கு யார் மேல கோவம்? தனுஷா இல்ல வெங்கடேஷா?)

* இயக்குநர் மிஷ்கினின் ‘சைக்கோ’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி முதன் முதலாக ஒரு கனமான கதையம்ச சினிமாவில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஹீரோ இளையராஜாவின் இசைதான் என்று இப்பட க்ரூ கொண்டாடுகிறது. இந்த சூழலில், ”இந்த படத்தை பார்த்துட்டு, பிறகு என்னை ‘சைக்கோ மிஸ்கின்’ அப்படின்னு கூப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை!” என்றிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். (இப்ப மட்டும்?....)