நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாக உள்ள திரைப்படம் சீதக்காதி இந்நிலையில் இந்த படத்தை பற்றியும் இந்த ஆண்டு விஜய்சேதுபதிக்கு எப்படி அமைந்தது என்பதை பற்றியும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி தனக்கு தெரியாமலேயே இந்த ஆண்டு மட்டும் 11 கோடி  ரூபாயை தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றபடி இந்த ஆண்டு திருப்திகரமாக தான் இருந்தது என்றும் பண ரீதியாக மட்டும் பின்னடைவை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் நடித்து வெளியாகியுள்ள சீதக்காதி திரைப்படம்  இவருக்கு 25 வது படம்.  இந்த படத்தை பற்றி பேசும் போது, எந்த வேலையாக இருந்தாலும்  ஆர்வத்தோடு, மிகவும் சந்தோஷப்பட்டு அதையே நினைத்து முழு ஈடுபாட்டோடு செய்து வந்தால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். 

அதுபோலத்தான் எனக்கும் மிகவும் பிடித்து சந்தோஷத்துடன், முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறேன். இதுவே எனக்கு பெருமகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடித்து வெளிவரும் எந்த படங்களாக இருந்தாலும் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரை ஒருமுறைக்கு இருமுறை படத்தை பார்க்க சொல்லி அவரிடமிருந்து கருத்து கேட்டுக் கொள்வாராம். ஒரு சில படக்காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது என யார் கூறினாலும் அந்த காட்சியில் நான் நன்றாக நடித்து உள்ளேனா எனபதை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன் என  நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்து உள்ளார்.