i am not a director i am a politician

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும், காலா திரைப்படம் தான் இன்று தமிழகத்தில் ஹாட் டாப்பிக். காலா திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள், விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இன்று காலா திரைப்படம் உலகெங்கிலும் ரிலீசாகி இருக்கிறது. ஒரு பக்கம் காலாவிற்கு நல்ல வரவேற்பு என்றும், இன்னொரு பக்கம் தியேட்டர்களே காலியாக இருக்கின்றன என்றும், மாறி மாறி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

காலா திரைப்படத்திற்கு வரும் விமர்சனங்களை பார்க்கும் போது, ஓரளவிற்கு பாஸிடிவாக தான் இருக்கிறது. ரஞ்சித் இத்திரைப்படத்தை எடுத்திருக்கும் விதம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதே சமயம் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கான எந்த சாயலும் தெரியவில்லை. அவரது ஸ்டைல், டயலாக் என ரஜினி-ன் தனி சிறப்பு எதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை. என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கிறது.

ஆனால் இத்திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியலை பார்த்துவிட்டு பலரும், ரஞ்சித்திடம் இது ரஜினியின் அரசியல் தொடக்கத்துக்கான படமா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இது குறித்து பேசியிருக்கும் ரஞ்சித் இது ரஜினியின் அரசியலுக்கான படம் அல்ல.

”காலா” மக்களுக்கான படம் என தெரிவித்திருக்கிறார். மேலும் அவரிடம் நீங்கள் பேசும் அரசியலை பார்க்கும் போது, ரஞ்சித் ஒரு அரசியல்வாதியா? என சந்தேகம் எழுகிறது. உண்மையில் நீங்கள் இயக்குனரா? அல்லது அரசியல்வாதியா? என கேள்வி எழுப்பிய போது நான் ஒரு அரசியல்வாதி என அதிரடியாக பதிலளித்திருக்கிறார் ரஞ்சித்.