நாகினி 2  சீரியலில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை  அர்சோ கோவித்ரிகர். இவரை இவருயை கணவர் குடிபோதையில் பாத் ரூம்மிற்கு இழுத்து சென்று பலமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் ரசிகர்களுக்கு, எப்போதுமே திரில் மற்றும் அமானுஷ்ய கலந்த சீரியல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நெடுந்தொடர் 'நாகினி 2 ' 

இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை அர்சோ  கோவித்ரிகர். இவர் தற்போது தன் கணவர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் சிசிடிவி  ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு, தொழிலதிபர் சித்தார்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் காவல் நிலையத்தில் அர்சோ கொடுத்துள்ள புகாரில் , தன்னுடைய கணவர், தினம்தோறும் குடித்து விட்டது வந்ததால், அவரிடம் இந்த பழக்கத்தை கைவிடும்படி சண்டை போட்டேன். தன்னை தாக்கிய அன்றும் அவர் அதிக குடி போதையில் வீட்டிற்கு வந்தார். பொறுமையிழந்த நான் கத்தி சண்டை போட்டதால்,  அவர் தன் தலைமுடியை இழுத்து சென்று பாத்ரூமில் பலமாக தாக்கினார்.

அவர் என்னை அடித்து இழுத்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே வீடியோ ஆதாரத்தோடு தான் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கணவர் அடித்து நொறுக்கியத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார்.