Asianet News TamilAsianet News Tamil

சரித்திரம் படைக்குமா RRR? நாளை ஆஸ்கர் விழா... இந்தியாவில் நேரலையில் எப்போது? எப்படி பார்க்கலாம்? - முழு விவரம்

நாளை மார்ச் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ள ஆஸ்கர் நிகழ்ச்சியை இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

How to watch oscars 2023 in india Date time and live stream details here
Author
First Published Mar 12, 2023, 12:21 PM IST

95வது ஆஸ்கர் விருது விழா நாளை நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர். ஆஸ்கர் விழா கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த முறை ஆஸ்கர் விருதுகள் இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் இதில் இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.

அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஆஸ்கர் விருதையும் வெல்லும் என பலரும் கணித்து வருகின்றனர். இந்திய திரைப்படம் ஆஸ்கார் ரேஸில் இருக்கும் நிலையில், அப்படம் இந்தியாவுக்காக முதல் ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதையும் படியுங்கள்.. Oscar 2023 : என்னது ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்தார்களா? - பலரும் அறிந்திடாத 5 டக்கரான தகவல்கள் இதோ

How to watch oscars 2023 in india Date time and live stream details here

இந்நிகழ்ச்சி நாளை மார்ச் 13 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. 95-வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக காணலாம். இதை தவிர YouTube, Direct TV, Fubo TV, Hulu Live TV ஆகியவற்றில் ஏபிசி நெட்வொர்க் லைவ் ஸ்டிரீம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ஒருவேளை நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டால், RRR குழுவினரின் கொண்டாட்டங்களை மேற்கண்ட தளங்களில் நேரலையில் பார்த்து ரசிக்க முடியும்.

நாட்டு நாட்டு பாடலுக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். எழுத்தாளர் சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றியுள்ளார். ராகுல் சிப்லி மற்றும் காலபைரவா பாடியுள்ளனர். நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். பிரேம் ரக்‌ஷித்தின் நடன அமைப்பும், என்.டி.ஆர் மற்றும் சரண் ஆகியோரின் சுறுசுறுப்பான டான்ஸ் ஸ்டெப்கள் தான் நாட்டு நாட்டை மிகவும் பிரபலமாக்கியது. இதுவரை இந்திய படத்திற்கு ஆஸ்கர் விருதே கிடைத்ததில்லை என்பதை மாற்றி அமைத்து ஆர்.ஆர்.ஆர் படம் வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்... Ramya Pandian : டிரெஸ்ஸே போடாமல் போட்டோஷூட் நடத்தி டிரெண்டிங் ஆன ரம்யா பாண்டியன் - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios