ஆழ்துளை கிணறுகளுக்கு இன்னும் எத்தனை குழந்தைகள் இரையாகப் போகிறார்கள்... ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிய பிரபல நடிகர்...!

ஆழ்துளை கிணற்றுக்குள் இன்னும் எத்தனை குழந்தைகள் இரையாகப் போகிறார்கள் என பிரபல நடிகர் ஜெயம்ரவி மிகுந்த ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழந்தை ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து 4 நாட்கள் ஆன நிலையில், சுஜித்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரிக் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எப்படியாவது சுஜித் நல்லபடியாக மீண்டும் வர வேண்டுமென தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகளும் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என இந்திய முழுவதும் ஏராளமானோர் தங்களது வேதனையையும், சுஜித்தை மீட்க வேண்டும் என்ற தங்களது ஆவலையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.<

/p>

இந்நிலையில் சுஜித்தின் நிலையை அறிந்த ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், நம் நாட்டில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு இன்னும் எத்தனை குழந்தைகள் இரையாகப் போகிறார்கள்? இந்த மாபெரும் தவறை மீண்டும், மீண்டும் செய்யக்கூடாது!, சுஜித் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மிகுந்த உணர்ச்சிவசத்துடன் பதிவிட்டுள்ளார்.