How is Actor Dilip capture in Bhavana Molestation Case

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு வழியில்லை என்று காவல்துறையினர் அடித்து கூறியுள்ளனர்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி மலையாள படப்பிடிப்பு முடிந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாவனாவின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. இது குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் விஜிஷ் உள்ளிட்ட 6பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 50 லட்சம் பணத்திற்காக நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல்சர் சுனில் நடிகர் திலீப் மற்றும் முக்கிய புள்ளிகள் இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் முக்கிய நடிகர் என்பதால் ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாது என்று கருதிய போலீசார் திலீப் குறித்த ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினர்.

அதன் முதற்கட்டமாக காவ்யா மாதவன் நடத்திவரும் ஆடை நிறுவனத்தில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு மெமரி கார்டு ஒன்று சிக்கியது. அதை போலீசார் கம்யூட்டரில் போட்ட போது திலீப் இந்த கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளது தெள்ள தெளிவாக தெரிய வந்தது.

ஆனாலும் கூடுதல் ஆதாரங்களை வேண்டும் என்று நினைத்த போலீசார் திலீப் மற்றும் அவரது நண்பர் நாதிர்ஷா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பலமணி நேரம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின் போது தனக்கும் கடத்தல் விஷயத்திற்கும் சம்மந்தம் இல்லாதது போல் திலீப் கூறியுள்ளார். ஒருகட்டத்தில் திலீப்பின் பேச்சுக்கு கடுப்பான போலீசார் அவர்களிடம் இருந்த ஆதாரங்களை போட்டு காண்பித்துள்ளனர்.

வலையில் வசமாக சிக்கிய அவரால் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சிக்கி தவித்துள்ளார். மலையாளத்தில் பெரும் நடிகர் என்பதால் உண்மையை மறைத்து விட முடியாது என்று கூறிய போலீசார் திலீப் யார் யாருடன் தொலை பேசியில் உரையாடி உள்ளார் என்ற ஆதாரங்களையும் ரெக்கார்ட் செய்துள்ளனர்.

மேலும் திலீப் இந்த வழக்கில் விரைவில் வாங்கிவிடுவார் என்று கருதிய போலீசார் அவர் பேசிய அனைத்து விஷயங்களையும் துல்லியமாக ரெக்கார்ட் செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர். இதனால் திலீப்பிற்கு நிச்சயம் ஜாமீன் மறுக்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

திலீப் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டது வெளிவந்த உடன் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் யுவ மோர்கா போன்ற அமைப்புகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடியதுடன் திலீப்பின் ஓட்டலின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திலீப்பை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் திட்டமிடபட்டுள்ளதாக தெரிகிறது.