* தீபாவளி ரிலீஸில் ‘பிகில்’ மட்டுமே பட்டையை கிளப்பப் போகிறது! என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சர்க்கார் மட்டுமே சதாய்த்தது போல் இந்த வருடமும் விஜய்யின் ரசிகர்கள் குஷியாய் இருந்தனர். ஆனால் வித்தியாசமான மேக்கிங்கில், கதையோட்டத்தில் வரும் ’கைதி’ படம் இந்த குஷியை குறைத்திருக்கிறது. கார்த்தி நடித்திருக்கும் இதுவும் தீபாவளி ரேஸில் இருக்கிறது. பிகிலுக்கு இப்படம் செக் வைக்கலாம்! என்கிறார்கள். 


இதில் பியூட்டி என்னவென்றால் இந்த படத்தின் இயக்குநர்தான் விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ். பிகிலுக்கு வில்லனாகிட்டார் லோகு. 

* சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ரிசல்ட் கலவையாக வந்து கொண்டிருக்கிறது. ஹிட்! என்று சிரஞ்சீவி தரப்பும், இன்னொரு தரப்போ ‘ஆவரேஜ்’ என்றும் சொல்லிக் கொண்டுள்ளன. 
இது இப்படியிருக்க இந்தப் படத்தில் கேமியோ பண்ணியிருக்கும் அனுஷ்காவோ செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். தனக்கு படத்தில் நல்ல ஸ்கோப் கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துள்ளார். 

* கமல் மகள் ஸ்ருதிக்கு பெயருக்கு ஏற்றார் போலேயே இசை மீது செம பிரியம். நடிப்பா? இசையா? என்றால் தயங்காமல் ‘இசை’ என்பார்.  ஒரு இடைவெளிக்குப் பின் தமிழிலில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படமும், இந்தி படம் ஒன்றும் செய்து கொண்டிருக்கும் ஸ்ருதி, தரமான இசை ஆல்பம் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். 

* விஜய்யின் பிகில் படத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பு பெரிதாய் எகிறி நிற்கிறது. வரும் 12-ம் தேதியன்று டிரெய்லர் வெளியாகிறது. இந்த டிரெயிலரிலேயே மாஸ் காட்டிட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பும், டிரெய்லரை கொண்டாடி ரெக்கார்டு பண்ண வேண்டும் என்று ரசிகர் தரப்பும் திட்டம் போட்டு களமிறங்கியுள்ளன. 

* கடந்த சில படங்களாகவே நரைத்த தலையுடன் (விஸ்வாசம் ஃபிளாஸ்பேக் நீங்கலாக) தரிசனம் தந்து கொண்டிருக்கும் தல அஜித், இப்போது விநோத்துடன் செய்து கொண்டிருக்கும் செம்ம ஆக்‌ஷன் மூவியில் கருத்த தலைமுடியுடன் வருகிறார். செம்ம ஸ்டைலியான போலீஸ் கட் உடன் தலயின் தோற்றம் செம்ம செக்ஸியாக இருக்கிறதாம்!