பிரபல பாலிவுட்டில் முன்னணி நடிகராரான மிலின்ட் சோமன், கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் 27வயதாகும் விமான பணிப்பெண் அங்கிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் தன்னுடைய மகள் வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாக கூறி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு 'நாங்கள் உண்மையாக காதலிக்கிறோம்... எங்களுடைய காதல் உண்மையான அன்பை மட்டுமே பார்த்து வந்தது என்றும், வயதை பார்க்க வில்லை என்றும் கூறியிருந்தார். இதனால் தங்களுடைய காதலை புரிந்துக்கொண்ட தங்களுடைய குடும்பத்தினர் தங்களை சேர்ந்து வைத்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் மில்லத் தன்னுடைய காதல் மனைவியுடன், தேனிலவு சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 

மில்லத் பல பாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் 'பச்சைகிளி முத்துச்சரம், பையா உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க